புதன், 6 டிசம்பர், 2023

ஜீவநாடி அற்புதங்கள் 5 (பகுதி -5) கோடீஸ்வர பரதேசியும் அகத்தியரும்

  அகத்தியரின் ஜீவநாடி அற்புதம் # 5 :    பகுதி - 5  


முந்தைய பகுதிக்கு :  

ஜீவநாடி அற்புதங்கள் # :  5 (பகுதி -4)

          கோடீஸ்வர பரதேசியும் 

ஜீவநாடி அகத்தியரும் !!



 அகத்தியர்

( ஜீவநாடி மூலம் புரிந்த )
அற்புதங்கள் !! 



அகத்தியர் & போகர் கருணை புரிந்த அற்புதங்கள் !!


ஜீவநாடி அற்புதங்கள் # :  5 (பகுதி - 5)

அனுமத்தாசன் அய்யா  தொடர்ந்து..கூறுகிறார்.....!

 

உன் குழந்தைக்கு கண் பார்வை வர வேண்டுமானால் மூணு வழி உண்டு,

என்று ஒவ்வொன்றாகச் சொல்லி கொண்டு வந்த போது,

முதல் இரண்டு வழிகளை பொறுமையாகக் கேட்ட அந்தத் தலைவன், மூன்றாவது கட்டளையை கேட்டதும், ஏற்று கொள்ள மறுத்தான்.

 பணக்காரர்களுக்கு வேண்டிய காரியத்தை முடிக்க பணம் வாங்கிக்கொண்டு மற்றவர்களை மிரட்டி, ஓட ஓட விரட்டி அடித்து நொறுக்கி, பிழைத்து வந்த அந்த தலைவனுக்கு, குழந்தை பாசம் எக்கச்சக்கமாக இருந்தது.

 இதனால் குழந்தைக்காக அந்த படுபாதகமான கொலை செயலைக் கூட நிறுத்த முன் வந்தான்.  இது எனக்கு மகிழ்ச்சியை தந்தது.

 இரண்டாவது, கொல்லி மலைகாட்டிலுள்ள சித்த வைத்தியரிடம் சென்று மூன்று மாதம் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கவும் தயாரானான்.

ஆனால் மூன்றாவதாக, "இதுவரை நீ செய்த பாவத்திற்கெல்லாம் பரிகாரமாக ஒரு அநாதை ஆஸ்ரமத்திற்குச் சென்று, கடைசி வரை இலவசமாக சேவை செய்யணும்" என்று அகத்தியர் சொன்னதை தான் அவனால் ஏற்றுகொள்ள முடியவில்லை.

 "மொதல்ல சொன்ன ரெண்டும் என்னால செய்ய முடியும். கடைசியிலே சொன்ன வேலையை மாத்திரம் என்னால செய்ய முடியாதுங்க. எனக்கு மூணு சம்சாரங்க. வரும்படி வேறு ஏதும் கிடையாது.

 எங்க குடும்பத்தைக் காப்பாத்தவே என்னால முடியல.

நான் போய் அநாதை ஆஸ்ரமத்திலே சேவை செய்யணுமா?" என்று முணுமுணுத்தான்.

பின்பு என்னிடம் திரும்பி "சென்னை தமிழில்" பேசினான்.

 "என்னா நைனா? நீ கப்சா விடறியா?

இல்லை மெய்யாலுமே இதச் சொல்றியா,

அதை மொதல்ல சொல்லு?" என்று அதிகாரத்தோடு கேட்டான்.


இன்னமும் இவன் முரட்டுத்தனம் இவனை விட்டு போகவில்லை என்பதை உணர்ந்து "இது அகத்தியர் அருள்வாக்கு" என்றேன்.

 "மொதல்ல என் குழந்தைக்கு எந்த சித்தர் கிட்ட போகணும்.

என்ன என்ன வைத்தியம் செய்யணும்னு சொல்லு.

 அதை செஞ்சு, என் குழந்தைக்குப் பார்வை வந்துட்டா போதும்.

அப்புறமா மத்ததை யோசிக்கலாம்னு" ஒரு முடிவுக்கு வந்தான்.

 "நேத்திர தோஷ நிவர்த்தி புஷ்பம்" என்று ஒன்று மூணு வருஷத்துக்கு ஒரு முறை கொல்லி மலை காட்டில் விளையும்.

 அந்த புஷ்பத்தை எடுத்து அதன் சாற்றை பிழிந்து தினமும் ஒரு சொட்டு கண்ணில் விடவும்.  தலையிலும் தேய்க்கணும். இதோடு வேறு சில மூலிகைச் சாற்றையும் அந்த கொல்லிமலைச் சித்த வைத்தியர் கொடுப்பார்.

 இந்த வைத்தியத்தை சரியா தொண்ணூறு நாட்கள் செய்து வந்தால் போதும், கண் பார்வை துல்லியமாக தெரியும். கடைசிவரை ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது


உடனே கொல்லி மலை நோக்கிச் செல்க" என்று அகத்தியர் ஜீவ நாடியில் கூறினார்.

 "உடனே கிளம்பணுமா?"

 "ஆமாம்"

"அப்போ அந்த வேலையை எப்போ முடிக்கறது?" என்று தனக்கு தானே பேசிக்கொண்டான். மற்றவர்கள் விழியைப் பிதுக்கினார்கள்.

 "வந்த வேலைய.... அதை விட்டு விட்டு உன் குழந்தையைப் போய் கவனி" என்றேன். அவன் புத்தியை மாற்றுவதற்காக.


தலைவன் யோசித்தான்.

 இதற்குள் அவனை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்தது "உனக்கு புத்திகித்தி கெட்டுப்போயிருச்சா...கை நீட்டி பணத்தை வாங்கி இருக்கே...

வாங்கின பணத்துக்கு காரியத்தை முடிச்சிட்டு பிழைக்கிற வழியை தேடுவியா?

ஜோசியம் பார்த்துக்கினு நேரத்தைக் கெடுத்திட்டிருக்கே..வாப்பா...

 நமக்கெல்லாம் நாடியும், ஜோசியமும் எதுக்கு. அட வாப்பா."

என்று தலைவனை உசுப்பி விட்டனர்.

 "டேய்.... மாடசாமி... உனக்கும் பிரச்சினை இருக்குனு சொன்னியே...

கேட்டு பாரு", என்று தலைவன் சொன்னனே தவிர அவர்கள் சொன்னதை காதில் வாங்கவே இல்லை.

 "அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்..

முதல்ல அந்த பெரியவரை கண்டுபிடிப்போம் வா" என்று

தலைவன் கையை பிடித்து இழுத்தான்.

 நான் பொறுமையாக அவர்களை பார்த்தேன்.

"அய்யா.  இவன் பெயர் மாடசாமி. என் தம்பி மாதிரி.

இவனுக்கும் சில பிரச்சினை இருக்கு.

நாடி பார்த்து சொல்லுங்க" என்றான் தலைவன்.


 "பார்க்கலாமா?" என்று மாடசாமியை பார்த்து ஒப்புதல் கேட்டேன்.

ஶ்ரீ அகத்தியர் பதம் போற்றி!!

முழுதும் வாசித்த அனைவருக்கும் ..  நன்றிகள் 


★ கருவூரான் 
www.t.me/jeevanaadi/  &   https://siththarkaldesam.blogspot.com/


இதன்  முந்தைய தொடர்ச்சி  :  ஜீவநாடி அற்புதங்கள் 5  (பகுதி -4)

&

முந்தைய பகுதிக்கு :    ஏமாற்றும் வேலை முகவரை திருத்திய நந்தீசர் !!






கருத்துகள் இல்லை: