செவ்வாய், 21 நவம்பர், 2023

ஜீவநாடி அற்புதங்கள் 4 (பகுதி -1) இருதய துவாரம் நீங்கிட செய்த போகரின் ஜீவநாடி

 

அரிதான 🔥அக்னி கிரியா 🔥நிகழ்வு  :

FREE ADMISSION for Pre Registers

 டிசம்பர் 17, 2023 @ 10am

கரும்குளத்தில் @ TIRUNELVELI 


குழந்தையின் இருதய துவாரம் 

நீங்கிட செய்த  போகரின் ஜீவநாடி அற்புதம் !!




 போகரின் ஜீவநாடி அற்புதம் :  பகுதி - 1

போகர்

( ஜீவநாடி மூலம் புரிந்த )
அற்புதங்கள் !! 





போகர் கருணை புரிந்த அற்புதங்கள் !!


ஜீவநாடி அற்புதங்கள் # :  4 (பகுதி -1)


போகர்

( ஜீவநாடி மூலம் புரிந்த )
அற்புதங்கள் !!

குழந்தையின் இருதய துவாரம் 

நீங்கிட செய்த  போகரின் ஜீவநாடி அற்புதம் !!
போகர் கருணை புரிந்த அற்புதங்கள் !!

(** YEAR 2000-2005)

அநுமத்தாசன்  எனும் த.கி ராமசாமி (1944-2010)

அகத்தியர்  ஜீவநாடி ஆசான் அவர்கள் சந்தித்த நிஜ அனுபவங்களை..  அக்கால தினத்தந்தியில் வெளிவந்த "அகத்தியர்  அருள்வாக்கு" தொடரின் தொகுப்பிலிருந்து..

 நன்றிகள்  Source from :

 "நாடி சொல்லும் கதைகள்" புத்தகங்கள் தொகுப்பு

அறந்தாங்கி சங்கர்  +91 9444160161

===============================


 போகரின் ஜீவநாடி அற்புதம் :  பகுதி - 1

!!" சித்தர் ஜீவநாடி அற்புதங்கள்"!!

அனுமத்தாசன் அய்யா கூறுகிறார்.....!

அகத்தியர் அருளும் "ஜீவநாடி" இருந்ததை போல்,

 போகரின் ஜீவ நாடி ஒன்றும் அகத்தியர் அருளால்

என்னிடம் வந்து சேர்ந்தது.


பொதுவாக அதில், போகர் மருத்துவ முறைகளை பற்றியும்,

இன்ன வியாதிக்கு இன்ன மூலிகை என்றும் தகவல் தருவது வழக்கம்.

அகத்தியர் ஜீவ நாடி போலவே அதிலும் போகரின் வார்த்தைகள்  தங்க நிறத்தில் வந்து போகும்.


அதை படித்து

பலருக்கும் போகர் அருளால்

மருந்துகளை கிடைக்க வழி செய்துள்ளேன்.



ஒருநாள் இரு இளம் வயது தம்பதியர் நாடி படிக்க வந்து அமர்ந்தனர்.



 இருவரையும் அமரச்செய்து விஷயம் என்னவென்று விசாரித்தேன்.


"
எங்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பின் தான் ஒரு குழந்தை பிறந்தது.

அதற்கு இப்பொழுது இரண்டு வயது ஆகிறது.

 

பிறக்கும் போதே உடல் நலக் குறைவுடன் பிறந்துள்ளது."


"என்ன உடல் நலக் குறைவு?"

"ஒன்றரை வயதானதிலிருந்து திடீர் திடீர் என்று உடல் முழுவதும் நீல நிறமாகி விடும். உடனே,

குழந்தையை வாரி எடுத்து மருத்துவ மனைக்கு தூக்கி சென்று சிகிர்ச்சை அளித்தால் வியாதி விலகி விடுகிறது.

ஆனால் மறுபடியும் அந்த வியாதியின் தாக்கம் எப்பொழுது வரும் 

என்பதை எங்களால், மருத்துவர்களால் கணிக்க முடியவில்லை


எத்தனையோ மருத்துவ முறைகளை கையாண்டு விட்டோம்.

 

முதலில் மாதம் ஒருமுறை என்று வந்த உடல் நலக்குறைவு,   இப்பொழுது வாரம் ஒருமுறை என்று ஆகிவிட்டது.



கடைசியாக ஒரு மருத்துவரிடம் சென்ற போது அவர்தான் இந்த தாக்கம் எதனால் வருகிறது என்பதை கண்டுபிடித்தார்.

 

பிறவியிலேயே எங்கள் குழந்தையின் இருதயத்தில் ஒரு துவாரம் உள்ளதாம்.

 

அதனால் ரத்தம் பம்ப் பண்ணுவது சரியாக அமையாத நேரங்களில்,

பிராணவாயு குறைவால் உடல் நீல நிறமாகிவிடுகிறது.

 

இதற்கு இரண்டு வழிதான் உள்ளதாம்.

ஒன்று குழந்தைக்கு அறுவை சிகிர்ச்சை செய்து பார்க்க வேண்டும். 


ஆனால் குழந்தை அறுவை சிகிர்ச்சையை தாங்குகிற அளவுக்கு உடலில் சக்தியை பெறவில்லை. அதனால் அறுவை சிகிற்ச்சை செய்தால் பலன் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்றார்".

 

"சரி! இரண்டாவது வழி என்ன சொன்னார்?"


"அந்த மருத்துவர் போகர் சித்தரின் மருத்துவ முறைகளில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். அதனால், போகர் சித்தர் மனது வைத்தால் மருந்து மூலம் இந்த குழந்தையை பிழைக்க வைக்கலாம் என்றார்.

 

மேலும் அவர் உங்களிடம் போகர் நாடியில் போகரின் உத்தரவு என்ன என்பதை கேட்டு வரச் சொன்னார். தாங்கள் தான் போகர் நாடி படித்து எங்கள் பிரச்சினைக்கு வழிகாட்ட வேண்டும்" என்று வேண்டினர்.

போகரின் ஜீவநாடியை எடுத்து முறையாக பிரார்த்தனை செய்து "சித்தபெருமானே! இந்த தம்பதியரின் குழந்தைக்கு நல்ல சரியான ஒரு தீர்ப்பை வழங்குங்கள்" என்று மனதுள் வேண்டிக்கொண்டேன்.


நாடியில் வந்த போகர் பெருமான் இவ்வாறு சொன்னார்.


"
இந்தக் குழந்தையை சிவபெருமானால் மட்டும் தான் காப்பாற்றமுடியும்.

இந்த குழந்தை காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அது, ஒரு வியாழக்கிழமை அன்று அலகானந்தா நதியில் மூன்று முறை மூழ்கி குளிக்கப்படவேண்டும்.  அப்படி குளிப்பாட்டும் போது சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும். கண்டிப்பாக சிவபெருமான் வந்து இந்தக் குழந்தையை காப்பாற்றுவார்" என்று கூறி உடனே மறைந்துவிட்டார்.


பொதுவாகவே 
போகர் சித்தர் கேட்ட கேள்விக்கு மிக சுருக்கமாக பதில் சொல்பவர்மருந்து எதையும் கூறாமல், 

குழந்தையை அலகாநந்தா நதியில் மூன்று முறை முக்கி குளிப்பாட்ட வேண்டும் என்று கூறியதை கேட்ட அந்த பெற்றோர்கள் அதிர்ந்து போய் விட்டனர்



அலகாநந்தா நதி குளிர்ச்சிக்கு பெயர் பெற்ற ஒன்று.

பெரியவர்களே அதில் ஒரு முறை நீராடினால் விறைத்து போவார்கள்.

அதிலும் இந்த குழந்தை ரொம்ப பலவீனமான இதயத்தைக் கொண்டு பிறந்துள்ளது.

 

அந்த குளிரில் மூன்று முறை முக்கி எடுத்தால் என்னவாகும்?

என்று நினைப்பு எனக்கு.

 

"இதை தவிர வேறு எதுவும் போகர் கூறவில்லையா?" என்று கேட்டனர்.

போகர் சொன்னதை கூறிவிட்டேன், மருந்து எதுவும் சொல்லவில்லை



அவர் சொன்னபடி செய்துவிட்டு வாருங்கள்.

கண்டிப்பாக நல்ல செய்தியுடன் திரும்பி வருவீர்கள்" என்றேன்.

சற்றும் நம்பிக்கை இல்லாமல் சோர்ந்த மனதுடன் எழுந்து சென்றனர் அந்த தம்பதியினர்.


இரண்டு மாதங்கள் வரை அவர்களிடமிருந்து எந்த செய்தியும் கிடைக்கவில்லை.


ஒரு நாள் சோர்ந்த முகத்துடன் அந்த தம்பதியினர் வந்தனர்.  

அந்த குழந்தையின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும் அவர்களால் போகர் நாடியில் வந்து சொன்னதை நிறைவேற்ற முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.


"உண்மை தான். போகர் நாடியில் வந்து சொன்னதை சாதாரண மனிதர்களின் மன நிலையில் இருந்தால் நிறை வேற்ற முடியாது தான்.

 சற்றே திட மான மன நிலையுடன் சித்தர் மீது நம்பிக்கை வைத்து காரியத்தில் இறங்குங்கள்.

எல்லாம் வெற்றி அடையும். சீக்கிரம் போங்கள்" என்றேன்.


இதன் தொடர்ச்சி  :  ஜீவநாடி அற்புதங்கள் 4  (பகுதி -2)

&

முந்தைய பகுதிக்கு :    ஏமாற்றும் வேலை முகவரை திருத்திய நந்தீசர் !!




கருத்துகள் இல்லை: