நந்தீசர் கருணை புரிந்த அற்புதங்கள் !!
ஏமாற்றும் முகவரை திருத்திய நந்தீசர் !!
குருநாதர் சுவாமி ஸ்ரீலஸ்ரீ தவாலேஸ்வரரின்
அருள் கட்டளையை சிரமேற்கொண்டு
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும்,
வெளிநாடுகளிலும் சத்சங்கமும்,
பீஜாட்சர மந்திர தீட்சையையும்
மக்களுக்கு வழங்குவதற்காக
பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த நேரம்.
சுமார் பதினைந்து ஆண்டுகட்கு முன்பு திருப்பத்தூரில் (வேலூர்)
ஒரு மண்டபத்தில் வழக்கம் போல ஒரு மாலைப்பொழுதில் சத்சங்கம்
செய்து கொண்டிருந்தேன்.
சத்சங்கம் நிறைவு பெற்று இறுதி நிகழ்ச்சியாக
பீஜாட்சர மந்திர தீட்சையும் வழங்கப்பட்டு
ஒவ்வொருத்தராக என்னிடம் வந்து ஆசி பெற்றுக் கொண்டிருந்தனர்.
என்னிடம் ஆசி பெற வந்தவர்
என் கால்களை பலமாக பிடித்துக் கொண்டு
குலுங்கி குலுங்கி அழத் தொடங்கினார்.
‘அழாதப்பா... என்ன விஷயம்னு சொல்லு..' என்றேன்.
மீண்டும் விம்மி விம்மி அழுதார்.
அழாம குருஜி கிட்ட என்னன்னு சொல்லுங்க" என்று சொன்னார்கள்..
அப்போது அவர்,
"குருஜி! என் பெயர் குமார்
சென்னையில் ஒரு தொழிற்சாலையில்
பிரதான எலக்ட்ரீஷியனாக பணியுரிந்தேன்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திடீரென அந்த பிரபலமான தொழிற்சாலையில்
மின்கசிவுகள் ஏற்பட்டு பல கோடிக்கணக்கான உபகரணங்கள் சேதமாகிவிட்டன.
இதற்கு என்னுடைய கவனக்குறைவு தான் காரணமென்று
என்னை பதவியிலிருந்து நீக்கியதோடு
வழக்கும் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்கள்.
கடந்த எட்டு மாதமாக சம்பளம் இல்லாததால் பணக் கஷ்டம்.
மேலும், இந்த வழக்கால் மன உளைச்சலாலும்
பல மாதம் கஷ்டப்பட்டு வந்தேன்.
இதுக்கு மேல் என்னால் தாங்க முடியல.
விஷ பாட்டிலும் தேனும் வாங்கி. வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன்.
என்று நினைத்தே ..
அப்படியே வர்ற வழியில தான் இங்க சத்சங்கம் நடந்துச்சு.
அதான் வந்தேன் என்று கூறி மீண்டும் அழுதார்.
"குமார் பிரச்சனைகளைத் தீர்க்க பல வழிகள் இருக்கு.
இதுக்கு மரணந்தான் வழி என்றில்லை.
'நாளைக்கு வந்து என்கிட்ட
நந்தீஸ்வரர் ஜீவநாடியை பாருங்க.
என அவரிடம் எடுத்துக் கூறியதும்..
அதை அவர் ஏற்றுக் கொண்டு நமஸ்கரித்துப் புறப்பட
அவரிடமிருந்து விஷ பாட்டிலையும் அன்பர்கள் வாங்கி வீசிவிட்டனர்.
இதன் தொடர்ச்சி : ஜீவநாடி அற்புதங்கள் 2 (பகுதி -2)
தொடர்ச்சி : ஜீவநாடி வாக்கியம் பெற / ஜீவநாடி படிக்க அணுகுவது எப்படி ?
முந்தைய பகுதிக்கு : நழிந்த தொழிலதிபரை உயர்த்திய நந்தீசர் ஜீவநாடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக