திங்கள், 6 நவம்பர், 2023

ஜீவ நாடி அற்புதங்கள் 1 (பகுதி -1) தொழிலதிபரும் நந்தி ஜீவ நாடியும் !!

 



நந்தீசர் ஜீவநாடியும்  தொழிலதிபரும்  !!


நந்தீசர் கருணை புரிந்த அற்புதங்கள் !!

அரிதான 🔥அக்னி கிரியா 🔥நிகழ்வு  :

 டிசம்பர் 17, 2023 @ 10am

கரும்குளத்தில் @ TIRUNELVELI 




நழிந்த தொழிலதிபரை உயர்த்திய

நந்தீசர் ஜீவநாடி
 உண்மை சம்பவங்கள் 





நந்தி ஜீவநாடி அற்புதங்கள் # : 1 (பகுதி -1)


சுவாமி சித்த குருஜி  கூறுகிறார்.....

                    மூன்று நாட்கள் கழித்து என் நண்பர் ஒருவர்,
அவருடைய நண்பரை அழைத்துக் கொண்டு வந்தார்.

 அப்போது அவர்...

சுவாமி !....

திருவண்ணாமலையில் கிரிவலத்தின்போது உங்களுக்கு..

ஜீவநாடி பொக்கிசம் கிடைத்த தகவலை என் நண்பரிடம் கூறியிருந்தேன்.

 அவர் வாழ்வில் மிகவும் சிரமங்கள் படுவதாகவும்அவர் கட்டாயமாக உங்களிடம் வந்து தனக்கு ஜீவநாடி படிக்கவேண்டும் என்ற ஆவலோடு என்னை உங்களிடம் கூட்டிப் போகச் சொன்னார்.

 அதுதான் கூட்டிவந்துள்ளேன் என தழுதழுத்த குரலில் கூறினார்.

 நானும் அவர்களிடம் 'ஜீவநாடி கிடைத்ததிலிருந்து இதுவரை யாருக்கும் எதுவும் படிக்கவில்லை. முதலில் பூசை செய்துவிட்டு உத்தரவு கேட்டுப் பார்க்கிறேன்'

என்று கூறிவிட்டு நந்தீஸ்வரருக்குப் பூசை செய்துவிட்டு நாடியைத் திறந்தேன்.          

சில தெய்வீக விதிமுறைகளையும்

வாக்குறுதிகளையும் விதித்து, ஒப்புதல் பின்னர் நாடியைப் படிக்கலாம் என்று நந்தீஸ்வரர் உத்தரவிட்டார்.

 பிறகு..

அவருடைய பெயர் நட்சத்திரத்தைக் கேட்டுக் கொண்டு நந்தீஸ் வரரை வேண்டி, முதல் ஜீவநாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

 அதிசயத்தக்க ஒளி வடிவ எழுத்துக்களில் செய்யுட்களாக வரத் தொடங்கியது. முதலில் பல அறிமுக பொது செய்யுள்களும், பின்பு அந்த நபர் பற்றிய குறிப்பும் வரத்தொடங்கியது.

 

அதில்... "முன் வினையின் காரணத்தால் நீயுந்தானே,

மூன்ற ரையாண்டு கடந்த காலந்தன்னில் எந்தவொரு தொழில் அபிவிருத்தி மற்றும் எடுத்த பல காரியங்கள் அனைத் திலுந்தான், வந்ததே தடை தாமதங்கள் தோல்வி, வாழ்க்கையிலே மிகப் பெரிய நஷ்டமாச்சு.

 

ஆச்சுதடா கைத்தறி நெய் தொழிலுந்தானே.  

ஆன பயிர் செய் களனி, கால் நடைகள், போச்சுதடா !

வீணாக கடன் மேலாச்சு !! 

பொதுவாழ்க்கை உந்தனுக்கு வெறுத்துப்போச்சு !!

 

வாய்க்குமடா இனி பதவியொன்று !

மதிப்பார்கள் பலபேர்கள் போற்றும் வண்ணம் !!”  என்று

செய்யுளைப் படித்து மேலும் வந்த செய்திகளையும் கூறினேன்.


அந்த தொழிலதிபர் கண்ணீர் மல்க என் கால்களைப் பிடித்து,

"சுவாமி! என் வாழ்வில் நடந்த செய்திகளைக் கூறிவிட்டீர்கள்

என்று சொன்னதோடு அவர் நண்பரிடம் என்னை சரியான

இடத்திற்கு கூட்டிவந்துள்ளாய்  என்று உளமார்ந்து நன்றி கூறினார்.


இதன் தொடர்ச்சி  :  ஜீவநாடி அற்புதங்கள்  1 (பகுதி -2)




கருத்துகள் இல்லை: