நந்தீசர் கருணை புரிந்த அற்புதங்கள் !!
அரிதான 🔥அக்னி கிரியா 🔥நிகழ்வு :
முந்தைய பகுதி யின்தொடர்ச்சி :
ஏமாற்றும் முகவரை திருத்திய நந்தீசர் !!

குடும்பத்தோடு வந்திருந்த அவரிடம் சில ஆறுதலான வார்த்தைகளைக் கூறிக் கொண்டு ..
ஜீவநாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.
அதில் வந்த செய்திகளைக்
கேட்டு நானே மிக அதிர்ச்சியடைந்து விட்டேன்.
ஜீவநாடியில், “நீ பல இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி,
அவர்களிடம் பணம் நகை என வாங்கி ,
உன் இளவயதில் பலபேர்களை கண்கலங்கி அழவைத்தவன்.
உன்னால் பல இளைஞர்கள்
வாழ்வு திக்குத் தெரியாமல் ஆகிவிட்டது. அந்தப் பாவத்தை ஒரேயடியாக அனுபவிக்கிறாய்” என்று வந்தது.
இதைக் கூறியதும் ....
அவர் ஓவென அழத் தொடங்கிவிட்டார்.
தனக்கு வேலை கிடைக்குமுன்
இப்படியொரு பெரும் பாவத்தை
தான் செய்ததை கூறி ஒப்புக் கொண்டார்.
“குருஜி! தெரியாம இந்தத் தப்பெல்லாம் பண்ணிட்டேன்.
இதுக்குப் பிராயசித்தமா ஏதும் கூறுங்க!" என மன்றாடினார்.
நந்தீஸ்வரரும் அவரை மன்னித்து
அவர் கர்மவினை தீர சில பரிகாரங்கள் கூறினார்.
அத்தனை பரிகாரங்களையும் சிரத்தையுடன் தான் செய்வதாகக் கூறி அவர்கள் யாவரும் ஆசி பெற்று புறப்பட்டனர்.
பின்பு, ஏழுமாதம் கழித்து குடும்பத்துடன் என்னைப் பார்க்க வந்திருந்தனர். தன்மீது போடப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டபோது
அந்த விபத்துக்கு தான் காரணமில்லையென்றும்,
மின் பகிர்மான இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறே
காரணமென உறுதிசெய்யப்பட்டதால்
இதுவரை கால சம்பளமும் பதவியும் கிடைத்திருப்பதாகவும்
கூறி மகிழ்ந்தார்.
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற முதுமொழிக்கேற்ப
பல இளைஞர்களை ஏமாற்றிய பாவம் அவரைத் தாக்கியதும்,
அதனை நந்தீஸ்வரர் உரைத்து,
மனதார தப்புக்கு மன்னிப்பு தந்து,
அந்த கர்மவினையைத் தீர்க்க பிராயச்சித்தமும் உரைத்தார்.
அதுமட்டுமல்லாமல், அவர் யார் யாரிடம் பணம் வாங்கினாரோ அவர்கள் யாவருக்கும்
முடிந்தவரை அத்தொகைகளை திருப்பிக் கொடுக்கவும் வைத்தார்.
எந்தவொரு காரணத்துக்காகவும் யாருடைய பொருளையோ பணத்தையோ ஏமாற்றினால்
பின்பு அந்த வினை நம்மையே சேரும் என்பதை நந்தீஸ்வரர் தெளிவாகக்கூறி,
இதுபோல இனி யாரையும் ஏமாற்றக்கூடாது என்றும் அவர்களிடம் வாங்கிய பணம் எப்படியும் திருப்பிக் கொடுத்தால்தான் பாபம் தீரும் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி அவர் தந்தையார் அவருக்கு பிரித்துக் கொடுத்த நிலத்தை விற்று, கொடுக்க வேண்டிய அனைவருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுத்ததாகவும் தற்போது மன நிம்மதியுடன் இருப்பதாகவும் கூறினார்.
ஒருவர் செய்த தவற்றை உணரவைத்து,
அவரை திருத்திய நந்தீஸ்வரர்
திருப்பாதங்களைத் தொழுவோம்.
முந்தைய பகுதிக்கு : நழிந்த தொழிலதிபரை உயர்த்திய நந்தீசர் ஜீவநாடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக