அகத்தியரின் ஜீவநாடி அற்புதம் # 5 : பகுதி - 6
முந்தைய பகுதிக்கு :
ஜீவநாடி அற்புதங்கள் # : 5 (பகுதி -4)கோடீஸ்வர பரதேசியும்
ஜீவநாடி அகத்தியரும் !!
( ஜீவநாடி மூலம் புரிந்த )
அற்புதங்கள் !!
அகத்தியர் & போகர் கருணை புரிந்த அற்புதங்கள் !!
"அதென்ன ஜோசியமோ.......நாடியோ.......சரி,
ஏதாவது சொல்லுங்க, அண்ணனுக்காக கேட்டுக்கிறேன்"
என்று முணு முணுத்தான்.
"மூதையர் சொத்துக்காக அண்ணன் தம்பி இருவரும் விரோதம் வந்தது. அண்ணனை ஆள் வைத்து வயல் வரப்பிலே தம்பியைக் கொன்றான். தம்பியை கொல்ல அண்ணன் மகன்கள் முயலுகின்றனர். ஆனால் உயிருக்கு பயந்து, அந்த தம்பி ஊரை விட்டே ஓடிவிட்டான்.
இப்போ அவன் காசியிலே ஒரு ஆதின மடத்திலே பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். அண்ணனை அநியாயத்துக்கு கொலை செய்து விட்டோமே, என்று தினம் நினைத்து, நினைத்து குமறிக் கொண்டு இருக்கிறான் அந்த தம்பி.
இப்போது அவனுக்கு பக்க வாதம் வந்து விட்டது. உயிருக்கு அணு அணுவாக போராடிக் கொண்டிருக்கிறான். அவனை அழைத்து மருத்துவ உதவி செய்தால் அவன் பிழைப்பான். அதோடு அவனுடைய சொத்து எல்லாம் அண்ணன் மகனான இந்த மாடசாமிக்கே வந்து சேரும்.
மாடசாமிக்கு ஒரு மனைவி உண்டு. அவள் ஒரு இருதய நோயாளி.
நோயோடு அவள் தினம், தினம் போராடிக் கொண்டு இருக்கிறாள்.
அந்த நோய் இன்னும் ஐந்து நாள் நீடித்தால் தீவிரமான நோயாக மாறிவிடும்.
அவளது உயிர் பிழைக்க வேண்டுமானால், மாடசாமியும் கொல்லி மலைச் சித்தர்கிட்டே அவளை அழைத்துச் செல்லட்டும். "நம்பிக்கை இருந்தால்"" என்று அகத்தியர் சொன்னார்.
பின்னர் "மாடசாமியின் மனைவி நோய் குணமாக இலையிலிருந்து மலரும் ஒரு பூவின் இதழை செந்தூரம் தேன் கலந்து மூன்று வேளை, பத்தியத்தோடு சாப்பிட வேண்டும்.
இதை அந்த கொல்லிமலை சித்தரிடம் அகத்தியர் சொன்னதாக சொல்" என்று அருள் வாக்கு அருளினார்.
மாடசாமியை பற்றி வந்த செய்தி, நிச்சயம் அவனை மட்டுமில்லாது, அவர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்க வேண்டும்.
இல்லையென்றால் அவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தங்களை தாங்களே ஆச்சரியத்தோடு பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள்.அல்லது மாடசாமியும் தேம்பி தேம்பி அழுதிருக்க மாட்டான்.
எல்லாரும் மாடசாமியை சமாதனப்படுத்தினார்கள்.
"அய்யா! நாடியில் வந்த செய்தி உண்மை தானுங்க. இவன் தகப்பனை சொந்த தம்பியே பத்து வருஷத்துக்கு முன்னால சொத்துக்கு ஆசை பட்டு கொன்னுட்டாங்க. அன்னியிலிருந்து மாடசாமியும் அவன் தம்பியும் சித்தப்பனை தேடிகிட்டு, பழிக்கு பழி வாங்க அலையுறாங்க.
சித்தப்பா தான் கிடைக்கலீங்க."
"இப்போ அவரு உயிரோடு இருக்காருன்னு நீங்கள் சொல்லித்தாங்க தெரியுது. அவரு எப்படியும் போகட்டும், முதல்ல இவன் சம்சாரம் உயிர் பிழைச்சா போதுங்க. நாங்க கொல்லிமலைக்கு புறப்பட்டு போறோம்க.
அப்புறமா உங்களை வந்து பார்க்கிறோம்" - தலைவனும் மற்றவர்களும் மாற்றி மாற்றி இதை சொன்னார்கள்.
கண்டிப்பா குழந்தைக்கு கண் பார்வை வரும்,
மாடசாமியின் மனைவி உடல் நிலையும் தேறும் என்று வாழ்த்தினேன்.
எதற்காக வெகு வேகமாக ஆக்ரோஷத்தோடு அந்த பெரியவரைத் தேடி கண்டு பிடித்து கொலை செய்யும் முயற்சியோடு வந்தார்களோ அந்த எண்ணத்தை அடியோடு கை விட்டு விட்டு, கொல்லி மலைச் சித்த வைத்தியரை நோக்கி தலைவனான ஏழுமலையும், மனைவியை அழைத்துகொண்டு மாடசாமியும் சென்றார்கள்.
அப்பாடா என்று அவசர அவசரமாக தண்ணீர் குடித்து விட்டு அமர்ந்தேன்.
எப்படியோ அகத்தியர் அருளால் அந்த கோடீஸ்வர சாமியார் உயிர் தப்பித்தார். அவரைத்தேடி வந்த இருவருக்கும் அகத்தியர் நல்ல வழியைக் காண்பித்து விட்டார் என்று ஒரு அல்ப சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது.
ஒரு வேளை அந்த கொல்லிமலை சித்த வைத்தியர் கொடுக்கும் மருந்தில் நோய் குணமாகவில்லை என்றால் என்ன செய்வது? அவர்கள் நம்மை பதம் பார்த்துவிடுவார்களே என்று அச்சம் வரத்தான் செய்தது.
எல்லாவற்றையும் அகத்தியர் பார்த்துகொள்வார் என்று விட்டுவிட்டேன்.
●★●★●★●
முழுதும் வாசித்த அனைவருக்கும் .. நன்றிகள்
★ கருவூரான் ★
www.t.me/jeevanaadi/ & https://siththarkaldesam.blogspot.com/
இதன் முந்தைய தொடர்ச்சி : ஜீவநாடி அற்புதங்கள் 5 (பகுதி -4)
+ தொடர்ச்சி : ஜீவநாடி வாக்கியம் பெற / ஜீவநாடி படிக்க அணுகுவது எப்படி ?
முந்தைய பகுதிக்கு : நழிந்த தொழிலதிபரை உயர்த்திய நந்தீசர் ஜீவநாடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக