நழிந்த தொழிலதிபரை உயர்த்திய
நந்தீசர் ஜீவநாடி - (பகுதி -2)
அரிதான 🔥அக்னி கிரியா 🔥நிகழ்வு :
முந்தைய பகுதிக்கு : 1 (பகுதி -1)
சுவாமி சித்த குருஜி கூறுகிறார்.....
தொழிலதிபருடைய (home textile/handloom production unit) தொழில் நஷ்டமானதையும் அதனால் கடன் உருவானதையும் மிக உருக்கமாகக் கூறி,
இதனால் தான் கட்சியிலிருந்து விலகி தனது வாழ்க்கையைப் பார்க்கப் போகிறேன் என்றார்.
மேலும், “எனது மகன் பெங்களூரில் ஒரு தகவல்
தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்கிறான்.
அவன் சம்பளத்தில்தான் குடும்பம் நடக்கிறது.
பெண்ணுக்குத் திருமண வயதாகிவிட்டது.
அவளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும்.
இந்த பொறுப்புகள் தலைக்குமேல் இருக்கும்போது பொதுவாழ்க்கை வெறுத்துவிட்டது. கடனே தவிர கண்ட பலன் ஏதுமில்லையென்றார்.
அடியேன் அவருக்கு ஆறுதல் கூறி மீண்டும் நந்தியெம் பெருமானை வேண்டிய ஜீவநாடியைப் படித்தேன்.
அதில், “இவை முன்ஜென்ம வினை.
இதை கரைக்க சில வழிமுறைகள் உண்டு.
அதை செய்ய வாழ்வு செழிப்பாகும்.
இவரை அரசு பதவி தேடிவரும்.
அரசியலிலிருந்து விலக வேண்டாம்" என்று கூறினார்.
உடனே நான், அவருக்கு நல்ல தைரிய மூட்டி வழிமுறைகளைச் செய்தால் நல்லது நடக்கும் என்று அனுப்பி வைத்தேன்.
அன்றிலிருந்து, நந்தியெம் பெருமான் ஜீவநாடியை தொடர்ந்து
படித்து வருகிறேன் எல்லோருக்குமாக.
பின்பு ஒரு ஏழு மாதங்களின் பின்பு...
அப்போது.. திருவண்ணாமலை பிரதோஷ கிரிவலம் சென்று கொண்டிருந்தேன்.
பாதி தூரம் சென்றிருப்பேன் என நினைக்கிறேன்.
கிரிவலப்பாதையில் என் அருகே ஒரு சிவப்பு விளக்கு பொருந்திய
(அரசு அதிகாரிகள் பயன்படுத்தும்) ஒரு இன்னோவா கார் வந்து நின்றது.
அந்த வண்டியில், “நகராட்சி தலைவர்” என்ற பெயருடன்
அரசு முத்திரையும் இருந்தது.
யார் என்று திகைக்கும்போதே அன்று ஜீவநாடி பார்த்த அந்த தொழிலதிபர் இப்போது பூமாலையும் கையுமாக“சுவாமி! நீங்கள் கூறிய நந்தீசர் ஜீவநாடி படி
நான் சேர்மன் ஆகிவிட்டேன்.
என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள்” என்று கூறியதோடு,
அவர் நண்பர் மூலமாக நான் கிரிவலம் வந்ததை அறிந்து திருவண்ணாமலையிலேயே வைத்து
ஆசிர்வாதம் வாங்கவேண்டும் என்று வந்ததாகவும் கூறினர்.
எனக்குள் அளவற்ற மகிழ்ச்சி நந்தீஸ்வரர் &
தவபாலேஸ்வரர் பால் ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக