வியாழன், 7 டிசம்பர், 2023

ஜீவநாடி அற்புதங்கள் 5 (பகுதி -7) கோடீஸ்வர பரதேசியும் அகத்தியரும்

   அகத்தியரின் ஜீவநாடி அற்புதம் # 5 :    பகுதி - 7  


முந்தைய பகுதிக்கு :  

ஜீவநாடி அற்புதங்கள் # :  5 (பகுதி -6)

          கோடீஸ்வர பரதேசியும் 

ஜீவநாடி அகத்தியரும் !!



 அகத்தியர்

( ஜீவநாடி மூலம் புரிந்த )
அற்புதங்கள் !! 



அகத்தியர் & போகர் கருணை புரிந்த அற்புதங்கள் !!


ஜீவநாடி அற்புதங்கள் # :  5 (பகுதி - 7)

அனுமத்தாசன் அய்யா  தொடர்ந்து..கூறுகிறார்.....!

 

ஜீவ நாடி படிப்பதில் எத்தனையோ சங்கடங்கள் உண்டு.

வருகின்ற அனைவரும் உடனடியாக ஜீவ நாடி படிக்கவேண்டும் என்பார்கள்.

ஜீவ நாடி படிக்கும் பொழுது, "செந்தமிழில் வரவில்லையே" என்று சந்தேகப்படுவார்கள்.

அகத்தியர் என்ன சொல்கிறார் என்பதை அடியோடு மறந்து விடுவார்கள்.

 சிலருக்கு தங்களது அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள் பெயர் வராது போனால் ஜீவ நாடி சோதிடத்தை நம்பமாட்டார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் மனதில் யார் யாரை பற்றி எல்லாம் நினைத்துக் கொண்டு இருக்கிறார்களோ, அவர்களை பற்றிய அத்தனை ரகசியங்களையும் அகத்தியர் சொல்ல வேண்டும், என்று எதிர்பார்ப்பார்கள்.

 அகத்தியர் தானாக எல்லா விஷயத்தையும் அப்படி அப்படியே முன்கூட்டியே சொல்ல வேண்டும். அப்படி சொல்லவில்லை என்றால் "இது ஏமாற்று நாடி" என்று, சிலர் சொல்லி விடுவதும் உண்டு.

 "காண்ட நாடி" பார்ப்பது வேறு, "ஜீவ நாடி" பார்ப்பது என்பது வேறு.

"அந்த நாடியில்" அன்றைக்கு அப்படி வந்தது...

ஜீவ நாடியில் அப்படி வரவில்லையே" என்று

காண்ட நாடிக்கும் ஜீவ நாடிக்கும் முடிச்சு போட்டு பேசுபவர்களும் உண்டு.

 "நாடி" வந்து நேரிடையாக கேட்டால் நல்ல வழி கிடைக்கும்,

இன்னொருவரிடம் கேட்க சொன்னால் அதற்கு பதில் வராது

என்று சொன்னால் இதையும் நம்ப மாட்டார்கள்.

 இப்படி பலவகையான சங்கடங்கள் எனக்கு நிறையவே வரும்.

நாற்பது ஆண்டு காலமாக அகத்தியர் ஜீவ நாடியோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், இன்னமும் சில விஷயங்களை பற்றி என்னால் முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை.

நாடி படிக்க மிக ஆவலோடு வருவார்கள்.  அவர்கள் எதிர்பார்ப்பு நிறையவே இருக்கும்.  அவர்களுக்காக நாடியை புரட்டும்போது சம்பந்தமில்லாத விஷயங்களைப்பற்றி அகத்தியர் சொல்லுவார்.  சில சமயங்களில் எதிரே அமர்ந்து இருப்பவருக்கு எந்த அருள்வாக்கும் வராது.

 இது எனக்கு மிகப்பெரிய சங்கடத்தை உண்டு பண்ணும்.

பல்லை கடித்துக்கொண்டு, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திண்டாடுவேன். என்னால் பொய் சொல்லவும் முடியாது. அதே சமயம் அகத்தியரிடம் கண்டிப்பாக பேசி பலன் சொல்லுங்கள் என்று யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது.

 ஏதோ நான்கு பேருக்கு நல்லது சொன்னோமா, வந்தோமா என்றில்லாமல், தேவையில்லாமல் எதை எதையோ சொல்லி அகத்தியர் இப்படி பயமுறுத்துகிறாரே, இது தேவை தானா? என்று வெறுத்து யோசித்தேன்.

 நாடி என்றால் கஷ்டத்தை போக்கும் ஒரு கருவியாக அல்லது வழிகாட்டியாக இருக்க வேண்டும்.  இந்த பரிகாரம் செய், அந்த கோவிலுக்கு போ என்று சொல்வதோடு நிறுத்திகொண்டிருந்தால் சந்தோஷமாக இருக்கும்

 எனக்கு கிடைத்த நாடி அப்படி அமையவில்லை என்பது ஒருவித வருத்தம் தான்.  நான் வருத்த பட்டதற்கு காரணம் உண்டு.  என்னிடம் இருக்கும் ஜீவ நாடியில் ஒளி வடிவத்தில் அகத்தியர் பேசுகிறார்.  

 மற்றவர்களிடம் இருப்பது போல காண்ட நாடி இல்லை.  

 காண்ட நாடியில், யார் நாடி பார்க்க வந்திருக்கிறார்களோ அவருடைய பெயர், பெற்றோர் பெயர், பிறந்த ஜாதகம் எல்லாம் முதலில் பார்க்கின்ற பொதுகாண்டத்தில் வரும்.

 இதை படித்த உடன் நாடி பார்க்க வருகிறவர்களுக்கு, உடனே புளங்காகிதம் ஏற்ப்பட்டுவிடும்.  பிறகு பரிகார காண்டம், சாந்தி காண்டம், தீட்ச்சை காண்டம் என்று பல ஏடுகளை புரட்டுவார்கள். அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி பரிகாரங்கள் வரும்.

 ஆனால் - என் கையில் இருக்கும் ஜீவ நாடியில்

 இப்படி ஏதும் இல்லாமல் வருகிற போகிறவர்களுக்கு அவர்களைப் பற்றியோ அல்லது அவர்களுக்கு வேண்டியவர்களைப் பற்றியோ ஏதாவது ஒரு அதிர்ச்சியை தந்தால் நாடி பார்க்க வருகிறவர்களுக்கு பயம் தான் வரும். நம்பிக்கை ஒரு துளி கூட வராது.

 எதற்காக அகத்தியர் ஜீவ நாடியில் இப்படி நடந்து கொள்கிறார் என்று நான் கவலைப்படுவதுண்டு.


ஶ்ரீ அகத்தியர் பதம் போற்றி!! 

ஶ்ரீ போகர் பதம் போற்றி!! 

முழுதும் வாசித்த அனைவருக்கும் ..  நன்றிகள் 


★ கருவூரான் 
www.t.me/jeevanaadi/  &   https://siththarkaldesam.blogspot.com/


இதன்  முந்தைய தொடர்ச்சி  :  ஜீவநாடி அற்புதங்கள் 5  (பகுதி -6)

&

முந்தைய பகுதிக்கு :    ஏமாற்றும் வேலை முகவரை திருத்திய நந்தீசர் !!





கருத்துகள் இல்லை: