அகத்தியரின் ஜீவநாடி அற்புதம் # 5 : பகுதி - 8
முந்தைய பகுதிக்கு :
ஜீவநாடி அற்புதங்கள் # : 5 (பகுதி -7)கோடீஸ்வர பரதேசியும்
ஜீவநாடி அகத்தியரும் !!
( ஜீவநாடி மூலம் புரிந்த )
அற்புதங்கள் !!
அகத்தியர் & போகர் கருணை புரிந்த அற்புதங்கள் !!
இதற்கிடையில் ---
என்னை திக்கு முக்காட வைத்த அந்த கோடீஸ்வர பரதேசி என்ன ஆனார் என்பதை பற்றி அறியும் எண்ணம் ஏற்பட்டது.
அவரை கடத்திக் கொலை செய்ய வந்தவர்கள், கொலை செய்யும் எண்ணத்தை விட்டு விட்டு தங்கள் குழந்தைக்காகவும், தன் மனைவிக்காகவும் கொல்லிமலைக்குப் போவதாக சொன்னார்களே, அவர்கள் என்ன ஆனார்கள்.
அவர்களைப் பற்றி இன்று வரை எந்த தகவலும் வரவில்லையே.எனவே அவர்களைப்பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று எனக்குத் திடீரென்று தோன்றியது.
சில பிரார்த்தனைகளைச் செய்து விட்டு, அகத்தியர் நாடியைப் புரட்ட பூஜை அறையில் அமர்ந்தேன்!
"கோடீஸ்வரனான அந்த சிவபக்தனுக்கு அகத்தியனை சோதிக்க வேண்டும் என்று ஒரு ஆசை. உயிர் தப்பித்தான். உற்றாரும் மற்றோரும் அவனை அடையாளம் கண்டு மனமுவந்து ஏற்று கொண்டார்கள்.
இவனை கொலை செய்தால் அத்தனை சொத்துகளையும் அபகரித்து கொள்ளலாம் என்று யார் எண்ணினானோ அவன் இப்பொழுது தன் நினைவில்லாமல் பக்கவாதம் ஏற்பட்டு பேச முடியாமல் மருத்துவ மனையில் போராடிக் கொண்டு இருக்கிறான்.
விதியின் செயலைப்பார்த்தாயா?: என்றார் அகத்தியர்.
"அய்யா! எனக்கொரு சந்தேகம். கேட்கலாமா?" என்றேன்
"ஐயம் ஏதும் இருப்பின் கேள்"
அந்தக் கோடீஸ்வரர் தனது வீட்டை விட்டு வெளியேறி வெகு காலமாயிற்று. பல வருஷம் கழித்துத்தான் தமிழகத்துக்கு வந்திருக்கிறார்.அவருக்கோ சொத்து, சுகத்தில், குடும்பத்தில் ஆசை இல்லை. இன்னும் சொல்லப்போனால்,
அவரால் யாருக்கும் எந்தவிதத்திலும் தொந்தரவு இல்லை. அப்படி இருக்க, எதற்காக அவரைக் கொலை செய்யும் முயற்சி நடந்தது? அவர் தானிவர் என்று மற்றவர்களுக்கு எப்படி அடையாளம் தெரிந்தது?"
கேட்க பட வேண்டிய கேள்வி இது. மனைவி மற்றும் உறவினர்கள் கொடுமையால் சொத்துகளை விட்டு விட்டு பரதேசியாகப் போனாலும் சில வக்கிர புத்தி அவனிடம் இருந்தது"
"என்னை கொலை செய்து, என் சொத்துகளை கவர சிலர் முயற்சி செய்கிறார்கள்.
எனவே, நான் வெளியூரில் இருக்கிறேன். விரைவில் ஊருக்கு வரப்போகிறேன்.
எனக்கு பாதுகாப்பு கொண்டுங்கள்" என்று தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அடிக்கடி கடிதம் எழுதி இருக்கிறான்.
அதனால் அவன் உயிரோடு இருக்கும் விஷயம் அரசல் புரசலாக உறவினர்கள் மற்றும் மனைவி குடும்பத்தினருக்கு தெரிந்து விட்டது."
"இவன் உயிரோடு இருக்கும் வரை தங்களுக்கு நிம்மதி இருக்காது" என்று
தான் அவனைக் கொல்ல முயற்சி நடந்தது" என்று சொன்னார் அகத்தியர்.
●★●★●★●
முழுதும் வாசித்த அனைவருக்கும் .. நன்றிகள்
★ கருவூரான் ★
www.t.me/jeevanaadi/ & https://siththarkaldesam.blogspot.com/
இதன் முந்தைய தொடர்ச்சி : ஜீவநாடி அற்புதங்கள் 5 (பகுதி -7)
+ தொடர்ச்சி : ஜீவநாடி வாக்கியம் பெற / ஜீவநாடி படிக்க அணுகுவது எப்படி ?
முந்தைய பகுதிக்கு : நழிந்த தொழிலதிபரை உயர்த்திய நந்தீசர் ஜீவநாடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக