அகத்தியரின் ஜீவநாடி அற்புதம் # 5 : பகுதி - 2
முந்தைய பகுதிக்கு :
ஜீவநாடி அற்புதங்கள் # : 5 (பகுதி -1)கோடீஸ்வர பரதேசியும்
ஜீவநாடி அகத்தியரும் !!
அனுமத்தாசன் அய்யா தொடர்ந்து..கூறுகிறார்.....!
எனக்கு மட்டும் "தெய்வ ரகசியமாக" சொன்ன தகவல் இது.
"இவன் ஒரு சிவ பக்தன்".
இப்பொழுது, இவன் எல்ல சொத்துக்களையும் வைத்து கொண்டிருந்தாலும், வீட்டை விட்டு ஒரு நாள் இரவு யாரிடமும் சொல்லாமல் வெளியே வந்து விட்டான்.
பல இடங்களில் பரதேசி போல் இவன் திரிய, உறவினர்களது வாரிசுகள் அனைவரும் இவன் இறந்து விட்டான் என்று எண்ணி (மனைவி உள்பட) சொத்துகளை அங்கு பங்கு போட்டு கொண்டிருக்கின்றனர்",
என்று இந்த மனிதரின் கடந்த கால வரலாற்றை சொல்லி "இவன் கண்டிப்பாக பிழைப்பான்" என்பதை மட்டும் அந்த பெரியவரிடம் சொன்னபோது அவர் நம்பவில்லை.
சிரித்தபடியே கையில் மீதி இருந்த பூச்சி மருந்து பாட்டிலை திறந்தார்.
நான் வெல வெலத்துப் போனேன்.
அகத்தியர் சொல்லிவிட்டார்.
நீங்கள் கண்டிப்பாக பிழைத்து விடுவீர்கள்,
என்று மட்டும் அந்த பெரியவரிடம் சொன்னேனே தவிர,
அவரது கடந்த கால வரலாற்றை பற்றி மூச்சு விடவே இல்லை.
ஏனெனில், அகத்தியர் நாடியை நான் படிக்கும்போது, எதிரே உள்ளவரின் வாழ்க்கைப் பற்றி ஒரு குறிப்பினை சொல்லி விடுவார்.
இதை "தெய்வ ரகசியம்" என்று குறிப்பிடுவதினால்,
இதை பற்றி ஒரு போதும் வாய் திறந்து யாரிடமும் நான் சொல்வது கிடையாது.
"நீங்கள் விஷம் குடித்திருந்தாலும் கண்டிப்பாக பிழைத்துவிடுவீர்கள்"
என்று சொல்லி மருத்துவமனைக்கு போகும்படி வற்புறுத்தினேன்.
"எனக்கு சரியாக சொல்லவேண்டும்.
அகத்தியர் என்ன சொன்னார்? மீண்டும் ஒரு முறை படியுங்கள்" என்றார்.
எனக்கு எரிச்சல் வந்தது. ஏதோ காலை சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது போலிருக்கே! என்று அவரை மனதுக்குள் திட்டிக்கொண்டே "கண்டிப்பாக பிழைப்பான் இவன்" என்று அகத்தியர் சொன்னதை அப்படியே படித்தேன்.
"நான் இதை நம்பவில்லை" என்று சொன்னவர், சட்டென்று கையில் இருந்த பூச்சி மருந்து பாட்டிலை எடுத்து, அதன் மூடியை திறந்து, அதில் மீதி இருந்த விஷத்தை மடமடவென்று குடித்தார்.
போலிசுக்கு போன் பண்ணத்தான் வேண்டும், என்ற முடிவுக்கு வந்தேன்.
"அய்யா! மீதமுள்ள விஷத்தையும் குடித்து விட்டேன். இப்போ நான் எப்படி பிழைக்க முடியும்? அகத்தியர் சொன்னது தப்புதானே?" இந்த கேள்விக்கு மாத்திரம் பதில் சொன்னால் போதும்" என்று சொன்னார்.
எனக்கு உடம்பு வெல வெலத்துப் போயிற்று. இனியும் தாமதிக்க கூடாது. ஏதாவது செய்து இவரை இந்த இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு கிளப்பியே ஆக வேண்டும் என்று மனசு படபடவென்று அடித்து கொண்டது.
அவரை வாசலில் உட்கார வைத்து விட்டு பூசை அறைக்குச் சென்றேன். சில நாட்களுக்கு முன்பு எனக்கு கிடைத்த பழனி நவபாஷாண முருகன் விபூதி பிரசாதமும், சந்தனக் காப்பு பிரசாதமும் என் கண்ணில் தென்பட்டது. அதில் சிறிது எடுத்து கொண்டு, வேகமாக வாசலுக்கு ஓடி வந்தேன்.
"சரி ஜாக்கிரதையாக போயிட்டு வாங்க, பக்கத்திலதான் ஆஸ்பத்திரி இருக்கு, அங்கே உடனே போறது நல்லது!'"
"எதுக்கு?" "விஷம் சாப்பிட்டிருக்கீங்க உடனே போங்க. நான் வேணா துணைக்கு வரட்டுமா? என்றேன்.
அவர்
செல்வதை பார்த்தேன். நடையில் உறுதி இருந்தது.
அகத்தியரை மனதார வேண்டிக் கொண்டேன். இவருக்கு எந்த வித ஆபத்தும் வந்து விடக்கூடாதே என்று.
அன்று ராத்திரி முழுவதும் எனக்குத் தூக்கமே இல்லை. எந்த நிமிடத்தில் எந்த செய்தி வருமோ என்று. அரைமணிக்கு ஒருமுறை வாசலிலேயே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஶ்ரீ அகத்தியர் பதம் போற்றி!!
●★●★●★●
முழுதும் வாசித்த அனைவருக்கும் .. நன்றிகள்
★ கருவூரான் ★
www.t.me/jeevanaadi/ & https://siththarkaldesam.blogspot.com/
இதன் முந்தைய தொடர்ச்சி : ஜீவநாடி அற்புதங்கள் 5 (பகுதி -1)
+ தொடர்ச்சி : ஜீவநாடி வாக்கியம் பெற /
ஜீவநாடி படிக்க அணுகுவது எப்படி ?
முந்தைய பகுதிக்கு : நழிந்த தொழிலதிபரை உயர்த்திய நந்தீசர் ஜீவநாடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக