அகத்தியரின் ஜீவநாடி அற்புதம் # 6 : பகுதி - 1
முந்தைய பகுதிக்கு :
ஜீவநாடி அற்புதங்கள் # : 5 (பகுதி -1)London Doctor Vs Agasthiyar
லண்டன் மருத்துவரும் அகத்திய & திருமூல சித்தரும்!!
அனுமத்தாசன் அய்யா கூறுகிறார்.....!
அகத்தியர் எல்லோருக்கும் அதிசயங்களை செய்துவிட்டால் மிகப் பெரிய மகிழ்ச்சிதான். சிலருக்கு எல்லாமே உடன் நடந்து விடுகிறது. பலருக்கு சில காலம் தள்ளி நடக்கிறது.
இன்னும்
ஒரு சிலருக்கு எத்தனையோ
பரிகாரங்கள் செய்தாலும் நடப்பது இல்லை.
இதற்கு
என்ன காரணம்?
இது
பற்றி பலதடவை நானும் யோசித்தேன்.
அகத்தியரிடமே
ஜீவ நாடியில் கேட்டேன்.
"எல்லோருடைய விதியையும் நான் மாற்ற வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டு ஒவ்வொருவருக்கும் அருள்வாக்கு கொடுத்து வருகிறேன்.
ஆனால்
வரிசை வரிசையாகத்தான் நடக்கிறது.
ஒருவேளை
நிறைய பேர்களுக்கு அருள்வாக்கினை அள்ளித் தருவதால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம்.
அல்லது
"பிரம்மா" என் வேண்டுகோளை தாமதமாக நிறைவேற்றலாம். சிலசமயம் அவர் விஷயத்தில் நான் தலையிடுவதை அவர் விரும்பாமலும் தடுக்கலாம்.
இன்னும்
சொல்லப் போனால் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகளும்
இருக்கலாம். அதனால் ஏற்பட்ட விளைவுதான் இது" என்றார்.
ஜீவ
நாடியில் அகத்தியர் சொன்ன போது என் மனதுக்கு வருத்தமாக இருந்தது.
ஜீவ
நாடி பார்க்க வருபவர்களில் பலவித குணங்களை கொண்டவர்கள் உண்டு. அகத்தியர் சொல்வதை அப்படியே சிரம் மேற்கொண்டு செய்து நன்மை அடைபவர் ஒரு விதம்.
அகத்தியரை
மதித்தாலும் அவர் வார்த்தையை மதிக்காமல்
தனக்கு தோன்றியபடி செய்து, மிகப் பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டு, பின்னர் என்ன செய்வதென்று அறியாமல்,
அவரிடமே ஓடி வந்து சரணடைந்து,
பின்னர் அந்த ச்ரமங்களை சிலகாலம்
கூட அனுபவித்து கழித்து, நிறைய பரிகாரங்களை செய்து மீண்டும் நல்வழிக்கு வந்து வாழ்க்கையை புரிந்து கொண்டு நடப்பவர்கள் இன்னொரு விதம்.
எத்தனை
பெரிய தவறை செய்தாலும், "சரணம்" என்று
வந்துவிட்டால்,
சித்தர்
கூட உதவுவார், என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியை இன்று
பார்ப்போம்.
அன்றைய
தினம் மிக அமைதியாக விடிந்தது.
நிதானமாக பூசை, தியானம் போன்றவை முடித்துவிட்டு, ஜீவ நாடியுடன்
வெளியே ஹாலில் வந்து அமர,
"மிகப் பெரிய அறுவை சிகிர்ச்சை ஒன்றைச் செய்யப் போகிறேன்.
இதற்கு அகத்தியர் அருள் வேண்டும்" என்று கேட்டார், லண்டன் நாட்டிலிருந்து வந்த ஒரு இளம் மருத்துவர் ஒருவர்.
"நல்ல
விஷயம்தான் செய்யப் போகிறீர்கள். நல்ல படியாக வெற்றி
பெறும். கவலைப்பட வேண்டாம்" என்று பொதுவாக அந்த மருத்துவரை நான்
வாழ்த்தினேன்.
"உங்கள் வாழ்த்து எனக்கு உற்சாகத்தை தந்தாலும், அகத்தியர் ஜீவ நாடியையும் ஒரு தடவை படியுங்களேன்" என்று
மறுபடியும்
கேட்டுக் கொண்டதின் பேரில்,
அகத்தியரின்
ஜீவ நாடியைப்
புரட்டினேன்.
சில
பிரார்த்தனைகளைச் செய்யச் சொல்லி "இதைச் செய்து விட்டு கீறல் வைத்தியத்தைச் செய் வெற்றி பெறுவாய்"
என்று அகத்தியர் ஜீவ நாடியில் உரைத்தார்.
சந்தோஷப்பட்டாலும்,
"நான் தைரியமாக இறங்கிச் செய்யலாமா?"
என்று
மீண்டும் கேட்ட பொழுது அவர் மீது எனக்கே
எரிச்சல் வந்தது.
"எத்தனை தடவைகள்,
எத்தனை முறைகளில் கேள்வி கேட்டாலும்,
அகத்தியர் பதில் ஒன்றுதான்"
என்று
சட்டென்று நானே பதில் கூறினேன்.
ஶ்ரீ அகத்தியர் பதம் போற்றி!!
●★●★●★●
முழுதும் வாசித்த அனைவருக்கும் .. நன்றிகள்
★ கருவூரான் ★
www.t.me/jeevanaadi/ & https://siththarkaldesam.blogspot.com/
முந்தைய தொடர்ச்சி : ஜீவநாடி அற்புதங்கள் 4 (பகுதி -1)
+ தொடர்ச்சி : ஜீவநாடி வாக்கியம் பெற / ஜீவநாடி படிக்க அணுகுவது எப்படி ?
முந்தைய பகுதிக்கு : நழிந்த தொழிலதிபரை உயர்த்திய நந்தீசர் ஜீவநாடி