வெள்ளி, 10 நவம்பர், 2023

ஜீவநாடி அற்புதங்கள் 3 (பகுதி -2) கடத்தப்பட்ட குழந்தையும் நந்தீசரும்

கடத்தப்பட்ட குழந்தையும் நந்தீசரும்

அரிதான 🔥அக்னி கிரியா 🔥நிகழ்வு  :

 டிசம்பர் 17, 2023 @ 10am

கரும்குளத்தில் @ TIRUNELVELI 


ஆட்டோவில் கடத்தப்பட்ட  

குழந்தையை  

மீட்டிட செய்த  நந்தீசர்

 உண்மை சம்பவங்கள்



நந்தீசர் கருணை புரிந்த அற்புதங்கள் !!



2.

கடத்தப்பட்ட குழந்தையும் நந்தீசரும்


 சுவாமி. சித்த குருஜி  கூறுகிறார்.....!

இதைக் கூறியதும், 

"அவர் குருஜி! எப்படியாவது அந்தக் குழந்தை கிடைக்க 

நந்தீஸ்வரர் அருள் புரியணும் என்று கெஞ்சிக் கொண்டேயிருந்தார்.


நந்தீஸ்வரரை வேண்டி நாடியைப் படித்ததும்.. 

"தீர்வு தரும் வழிமுறைகளை  உடனடியாகச் செய்தால் ஏழு மணிக்குள்ளேயே குழந்தை கிடைக்கும் என்று நந்தியெம்பெருமான் கூறினார்.

 அதன்படி, அவரிடம் இந்த விஷயத்தைக் கூறியதும்,

அவரும், அவருடைய தங்கை கணவருமாக ஆளுக்கொரு திசையில் தீர்வு

தரும் வழிமுறை வழிபாட்டைச் செய்யப் புறப்பட்டனர். 



அதுவும் திருவண்ணாமலையிலே தான் வழிமுறை 

செய்ய வழி வந்தது, 

அவர்களுக்கு நந்தீஸ்வரர் செய்த பெரிய அருளாசியாகும்.


அதாவது, சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் 

முன்பாக உள்ள துர்க்கையம்மன் கோயிலில் 

நூற்றியெட்டு எலுமிச்சை நெய் தீபம் போட்டு, 


நூற்றியெட்டு துர்க்கா மந்திரம் செபித்து,

அம்பாளுக்கு பூமாலை சாற்றி வழிபட வேண்டும். 


அதே போல அண்ணாமலையார் கோயிலிலும் 

முப்பத்தாறு நெய்தீபங்கள் ஏற்றி, 

ஆயிரத்தெட்டு முறை பஞ்சாட்சரம் செபிக்க வேண்டும்.





இதுதான் அந்த வழிமுறை.

கோயில் நடை சாத்துவதற்குள்ளாக செய்ய வேண்டும்

என்பதால் வேகவேகமாக ஆரம்பித்தார்கள். 



மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் வழிமுறை-பரிகாரத்தை 

திருப்திகரமாக செய்து விட்டு என்னிடம் தொடர்பு கொண்டு ஆசிபெற்றனர்.



பின்பு மாலை 4 மணியளவில் குழந்தையின் தாய்மாமனாகிய

அந்த இளைஞன் என்னிடம் தொடர்பு கொண்டு, 

“குருஜி.! போலிஸ் எல்லா பக்கமும் தேடிட்டு இருக்காங்க.

நாங்களும் டூ வீலர் முடிஞ்சவரைக்கும் தேடிட்டு இருக்கோம்.


ஆட்டோ ஸ்டாண்ட் எல்லாம் தேடிப் பார்த்தாச்சு.

இன்னும் எந்தத் தகவலும் கிடைக்கல. 


அந்த கிளினிக் கிராமத்தை ஒட்டி இருந்ததால், 

அந்த பகுதியில் CCTV காமெராவும் கிடையாது. 


அதனால் ரொம்ப சிரமம் என்று எல்லோரும் சொல்றாங்க..." என்று கூறினார். 


குழந்தையின் தந்தையோ போன் பண்ணி,

"எப்படியாவது எங்க குழந்தை கிடைக்கணும் குருஜி...

நந்தீஸ்வரரையும் அண்ணாமலையாரையும் வேண்டிக்கிட்டு தான் இருக்கோம்" என்றார்.

"நந்தீஸ்வரர் உரைத்தபடி நடக்கும் கவலைப்படாதீங்க" என்று

ஆறுதல் கூறி போனை வைத்தேன். 


இருந்தும் இவர்கள் பரிதவிப்பைப் பார்க்கும்போது கஷ்டமாகவே இருந்தது.

 மீண்டும் நந்தீஸ்வரரை வேண்டி ஜீவநாடியைத் திறந்து பார்த்தேன்.

 அப்போது அதில் நந்தீஸ்வரர், 

மாலை ஏழு மணிவரை பொறுமையுடன் இருக்கும்படியும் குழந்தை கிடைக்குமெனவும் மீண்டும் கூறினார்.

எனக்கு நல்ல திருப்தி கிடைத்தது.


நிம்மதியாக மற்ற பணிகளைக் கவனித்தேன்.

மீண்டும் அவர்களிடம் இருந்து மாலை 6 மணிக்கு வந்தது.



 இப்போது 6 மணியாகி விட்டது என்று அவர்கள் எல்லோரும்

என்னிடம் கூறி வேதனைப் பட்டனர். 


அவர்களிடம் நான் திரும்பவும் ஜீவநாடியைப் பார்த்தபோது வந்த பதிலைக் கூறி உறுதியுடன் இருக்கும்படி வேண்டிக் கொண்டேன்.

 

அதிலிருந்து பதினைந்து நிமிடம்தான் சென்றிருக்கும்.

அந்த குழந்தையின் தாய்மாமன் போன் செய்தார்.

"குருஜி! கோடி நமஸ்காரம்...குழந்தை கிடைச்சிடுச்சு.

 

திருக்கோவிலூர் போற வழியில் அந்த ஆட்டோவோட

குழந்தையை போலீசார் பிடிச்சிட்டாங்க. 

அது இங்க இருந்து பதினாறு கிலோமீட்டர் கிட்ட உடனே வரச் சொல்லியிருக்காங்க. உடனே புறப்படுறோம்.."

என்று கூறிவிட்டு இணைப்பை அவசரமாகத் துண்டித்தார்.


குழந்தை கிடைத்துவிட்ட ஆனந்தத்தில்,

அவர்களுக்கு காலும் ஓடவில்லை. கையும் ஓடவில்லை.

அவர்களின் சந்தோஷம் பேச்சிலே வெளிப்பட்டது.

 

மீண்டும் அரை மணிநேரத்தில்

அவர்களிடமிருந்து போன் வந்தது. கு

ழந்தையைக் கண்ணால் பார்த்து போலீசாரிடமிருந்து

பெற்றுக் கொண்டதாக மிக்க ஆனந்தமாக

ஒருவர் மாறி ஒருவர் போனில் பேசினர். 


அப்போது நேரம் சரியாக ஆறு மணி ஐம்பது நிமிடம்.

 நந்தீஸ்வரர் “ஏழு மணிக்குள் குழந்தை கிடைக்கும்"

என்ற வாக்கு பூரணமாக நிறைவேற்றப்பட்டதை

நினைக்க உள்ளம் புளகாங்கிதம் அடைந்தது.

எம்பெருமான் அண்ணாமலையார்,

நந்தியெம் பெருமானின் அருளை நினைத்து கண்ணீர் கசிந்தேன்.

 

ஓம் நமசிவாய! 

ஓம் நந்தீஸ்வராய !!

ஓம் நந்தீஸ்வராய நம:



 


+ தொடர்ச்சி  :  ஜீவநாடி வாக்கியம் பெற  / ஜீவநாடி படிக்க அணுகுவது எப்படி ?


முந்தைய பகுதிக்கு :   நழிந்த தொழிலதிபரை உயர்த்திய நந்தீசர் ஜீவநாடி



&

முந்தைய பகுதிக்கு :    ஏமாற்றும் வேலை முகவரை திருத்திய நந்தீசர் !!







கருத்துகள் இல்லை: