வெள்ளி, 10 நவம்பர், 2023

ஜீவநாடி அற்புதங்கள் 3 (பகுதி -1) கடத்தப்பட்ட குழந்தையும் நந்தீசரும் !!

கடத்தப்பட்ட குழந்தையும் நந்தீசரும்


அரிதான 🔥அக்னி கிரியா 🔥நிகழ்வு  :

 டிசம்பர் 17, 2023 @ 10am

கரும்குளத்தில் @ TIRUNELVELI 



ஆட்டோவில் கடத்தப்பட்ட  

குழந்தையை  

மீட்டிட செய்த  நந்தீசர்

 உண்மை சம்பவங்கள்



நந்தீசர் கருணை புரிந்த அற்புதங்கள் !!


நந்தி ஜீவநாடி அற்புதங்கள் # :  3 (பகுதி -1)




1.

கடத்தப்பட்ட குழந்தையும் நந்தீசரும்


 சுவாமி. சித்த குருஜி  கூறுகிறார்.....!

 உலகையே கொள்ளை நோயான கொரோனா பயமுறுத்திக் கொண்டிருந்த நேரம்.   

ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு புறப்பட்டுப் 

போக முடியாத நேரம்.  மக்களெல்லாம் வெளியே செல்ல முடியாமல், 

வீட்டுக்குள் முடங்கியிருந்த காலகட்டத்தில் ..


ஒருநாள் பகல் பதினொரு மணியளவில் எனக்கு

ஒரு போன் அழைப்பு வந்தது.

 திருவண்ணாமலையில் உள்ள என் சீடர் ஒருவரின் உதவியாளரே

அந்த போனைச் செய்திருந்தார். 



அவர், "சுவாமி எனக்குத் தங்கை முறையான

ஒரு பெண்ணுக்கு ஒன்றரை வயதுக் குழந்தை இருக்கிறது.

 

அக்குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால்,

ஒரு ஆட்டோவில் குழந்தையையும் கூட்டிட்டு ஆஸ்பத்திரி போயிருக்காங்க. 


அங்க டாக்டரைப் பார்த்துட்டுத் திரும்பி வர்ற வழியில.., 

அந்தப் பெண்ணுக்கு லேசா மயக்கம் போல இருந்திருக்கு.

 ஆட்டோவில் ஏறினது தான் தெரியுமாம்.

அதுக்குமேல எதுவுமே தெரியல்லையாம்.

கண்ண முழிச்சுப் பார்த்தா !!


எங்கேயோ ஒரு ஆத்தோரத்தில் தனியா உட்கார்ந்துட்டு

இருக்கிற போது சுயநினைவு வந்துச்சாம். 


குழந்தையைக் காணலையாம்.

ஆட்டோவும் எங்க போச்சுன்னு தெரியலையாம்.

 

குருஜி! எப்படியாவது அந்தக் குழந்தை திரும்பக் கிடைக்க..

நீங்கதான் நந்தீஸ்வரரிடம் பிரார்த்தனை பண்ணனும்.

 

 

ஜீவநாடியில் பார்த்து சொல்லுங்க...

குருஜி!' என்று மன்றாடினார்.




 நானும், "போலீஸில் இதுபற்றி புகார் கொடுத்தாச்சா..?"

எனக் கேட்டதும், “கொடுத்தாச்சு.

ஆனா எந்தத் தகவலும் வரலை." 

அவங்களும் தேடிக்கிட்டு தான் இருக்காங்க. என்று மறுமுனையில் பதிலளித்தார்.


"ரொம்பப் பாவமாச்சே...

அதுவும் பச்சக் குழந்தை பெற்றவர்களுக்குத்தான் தெரியும்

அதன் வேதனை."

 

நந்தீஸ்வரரை வேண்டிக் கொண்டு அவர் கூறிய..

  

அந்தப் பெண்ணின் பெயருக்கு 
ஜீவநாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.


அதில்...., 

"அந்த ஆட்டோக்காரன் குழந்தையைக் கடத்தும் நோக்கோடுதான் செய்திருக்கிறான்" என்றும், "

குழந்தையின் தாயை மயக்கமடைய வைக்க, 

அப்பெண்ணின்

சீட் பக்கமாக வாசனை சென்ட்டை தெளிப்பது போல மயக்க மருந்தைத் தெளித்திருக்கிறான். 

அதனாலே தாயும், குழந்தையும் மயக்கமாகிவிட, ஊருக்குப் போகாமல் வெளியில் சென்று சன நடமாட்டமற்ற

ஆற்றங்கரையில் தாயை இறக்கி விட்டுக் கொண்டு,

குழைந்தையை எடுத்துச் சென்றுவிட்டான்..." 

என்று நந்தீஸ்வரர் கூறினார்.



+ தொடர்ச்சி  :  ஜீவநாடி வாக்கியம் பெற  / ஜீவநாடி படிக்க அணுகுவது எப்படி ?



முந்தைய பகுதிக்கு :   நழிந்த தொழிலதிபரை உயர்த்திய நந்தீசர் ஜீவநாடி



&

முந்தைய பகுதிக்கு :    ஏமாற்றும் வேலை முகவரை திருத்திய நந்தீசர் !!





கருத்துகள் இல்லை: