அகத்தியர் கூறும் உண்ணும் வினை யால்
வரும் துன்பத்தை தீர்க்கும் எளிய வழிகள் :அகத்தியர் ஜீவநாடி
வாக்கு :-
அப்பனே யான் சொல்கின்றேன் அப்பனே.
இது போல் அப்பனே பின் அதாவது 100 பேரையாவது அப்பனே உயிர்களை கொன்று அப்பனே சாப்பிட்டக் கூடாது என்று சொல்லச் சொல் அப்பனே.
தானாக அனைத்தும் மாறும் என்று சொல்.
( அசைவம் சாப்பிடும் இந்த அடியவருக்கு
அவர் அசைவம் உண்ணுவதை வாழ்வில் அடியோடு நிறுத்தி பின்னர் 100 பேரிடம் அசைவம் தவிர்க்க வேண்டும் என்று உரைக்க வேண்டும் என்று கருணைக்கடல் அகத்தியர் ஒரு வினை தீர்க்கும் எளிய வழி சூட்சும பரிகாரத்தை அருளினார்கள்
)
அகத்தியர்:-
அப்பனே முதலில் கூறு
அவன் தனக்கு பிற உயிர்களின்
மாமிசத்தை உண்ணக் கூடாது என்று.
அப்பனே நீ கேள் இவன்தனை.
ஜீவநாடி கேட்பவர் 2:-
( சில உரையாடல்கள் )
அகத்தியர்:- அப்பனே நீ
கூறு ஈசனைப் பற்றி.
ஜீவநாடி கேட்பவர் 2:-
ஈசன் தான் மூலப்பொருளாக இருக்கின்றார்.
அவரை மீறிய தெய்வங்கள் இல்ல.
அவரைய நினைச்சுகிட்டா வாழ்க்கையில எல்லாமே நடக்கும்.
அவர் அருளால் தான் இந்த உலகத்தில் எல்லாமே நடக்கின்றது.
அவரு இன்றி எந்த அனுவும்
அசையாது.
அகத்தியர்:- அப்பனே பிற உயிர்களை
கொல்லாது என்று ஏன் சொல்கிறாய்
என்று அவன் இடத்தில் கூறு.
ஜீவநாடி கேட்பவர் 2:-
நம்ம மாதிரி தான் இன்னொரு உயிரும் பிறந்திருக்கு.
அதனால அந்த உயிருக்கு ஜீவ காருண்யத்தோட இருந்து அந்த உயிர காப்பாத்தனும்.
அகத்தியர்:- அப்பனே இப்பொழுது அதைத்தின்றால்
( அசைவம் ) நிச்சயமாய் நோய்கள் வரும் அப்பா. இப்பொழுது
நீயே கூறிவிடு சாப்பிட்டால் நோய்கள் வரும்.
உடம்பில் அனைத்து
குறைகளும் வரும் அப்பனே என்று நீயே கூறு பலமாக அனைவருக்கும் பலமாக.
ஜீவநாடி கேட்பவர் 2:-
எந்த உயிரையும் கொல்லக்கூடாது.இந்த உயிரை கொன்று சாப்பிடுவதனால கன்டிப்பாக நோய் வரும் என்று அகத்தியர் சொல்ரார்.
அதனால ஜீவ காருண்யத்தை கடை புடிக்கனும்
என்று அகத்தியர் சொல்ரார்.
ஜீவநாடி கேட்பவர்
2:- அந்த உயிரோட கர்மாவும் நமக்கு
சேரும்.
அகத்தியர்:- அதனால் அப்பனே அனைவருக்கும்
வள்ளல் பெருமான் சொன்னானே அதைச்சொல்.
ஜீவநாடி கேட்பவர் 2:-
வள்ளல் பெருமான் ஜீவகாருண்யத்தை அனைவரும் கடைபிடிக்கனும்.
எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
கொல்லாமை ஐயா சொல்லி இருக்காங்க.
அத வந்து எல்லாரும் பின் பற்ற வேண்டும்.
அகத்தியர்:- அப்பனே பின் ( வள்ளலார்
இராமலிங்க அடிகள் ) அவனை விட ஒரு ஞானியா? அப்பனே.
அவன் சொல்வதை கேட்காவிடில் அப்பனே அனைவருக்குமே
கஷ்டங்கள் தான் வரும். அவன் சொல்வதையே கேட்டதில்லை.
அப்பொழுது உண்ணுகின்றவன் அப்பனே அறிவாளியா?
சொல்கின்றவன் முட்டாளா? அப்பனே.
நீ விளக்கம் அளி அனைவருக்குமே.
ஜீவநாடி கேட்பவர் 2:-
( இராமலிங்க அடிகளர் , வள்ளல் பெருமான்)
அவரைவிட அறிவாளி இல்லை ( யாரும்
மனிதர்களில் ).
அகத்தியர்:- அப்பனே அப்போது அறிவாளி
சொல்வதை கேட்க வேண்டுமா இல்லையா?
ஜீவநாடி கேட்பவர்:-
கண்டிப்பாக கேட்க வேண்டும்.
அகத்தியர்:-
அப்பனே அதை கேட்காதனால்தான் வருவதே பிரச்சனை
என்பேன் அப்பனே.
பக்தர்களே சொல்கிறார்கள் அப்பா பின் உண்டு என்று கவலை இல்லை என்று.
இது நியாயமா?
அங்கேயே பக்தி பொய்யாகின்றது.
ஆனாலும் அவர்கள் தான் நம்புகிறார்கள்
அப்பனே எப்படி அப்பா உங்களுக்கு
மோட்சம் கிடைக்கும்? உன் கஷ்டங்கள்
தீரும் அப்பா ? கூறுங்கள்?
அகத்தியர்:- அப்பனே ஈசன் யார் என்று தெரியுமா? அனைவருக்குமே.
ஜீவநாடி கேட்பவர்:-
தெரியும் ஐயா.
அகத்தியர்:- அப்பனே ஈசன் தண்டனை
கொடுத்தால் யாராவது பின் தாங்குவார்களா
என்ன?
ஜீவநாடி கேட்பவர்கள்:-
தாங்க முடியாது.
அகத்தியர்:- அப்பனே அப்படிப்பட்டவன்
பிள்ளைகளை ( பிற உயிர்களை) கூட அப்பனை கொன்று தின்கின்றார்களே
அப்பனே அப்பொழுது அவனுக்கு கோபம் வந்தால் உலகத்தில் அப்பனே
எதை எதையோ செய்து விட்டு
நோய்களாக பரப்பி கஷ்டங்களை கொடுத்து
கடைசி யில் அழித்து விடுவான்.
அப்பனே சொல்லிவிட்டேன்.
( அனைத்து உயிர்களும் ஆதி ஈசனின்
பிள்ளைகள்.
ஜீவ காருண்யத்தை அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்லி
அவர்களை அசைவம் சாப்பிடாமல் தடுத்தால் அதுவே மிக்பெரிய ஆதி ஈசன் மனம் மகிழும் புண்ணியம்.
ஜீவநாடி கேட்பவர்கள் அனைவர்ருக்கம் எடுத்து சொல்லுங்கள்.
அப்படி சொல்லவில்லை என்றால்……..)
எச்சரிக்கையாக இருங்கள் அப்பனே. நீங்களும்
மற்றவர்களுக்கும் உங்களால் முடிந்தவரை சொல்லுங்கள். பின் சொல்லாமல்
இருந்தால் நிச்சயம் கடைசியில் நோய்கள்
வந்துவிடும்.
அப்பனே குடும்பங்களில் சிக்கல்கள் வந்துவிடும். அப்பனே சண்டை சச்சரவுகள் வந்துவிடும் அப்பனே. அதனால்
அவை எல்லாம் அதாவது இப்பொழுதே
உணரச்செய்யுங்கள் அப்பனே.
ஆனால் ( நீங்கள் அசைவம் சாப்பிட
வேண்டாம் என்று எடுத்துச சொல்லி
அப்படி அவர்கள் கேட்காவிடில் ) அவருடைய விருப்பமே
என்று நீங்கள் விட்டுவிடுங்கள்.
ஆனால் ( அசைவம் உட்கொண்டு ) தவறு
செய்தவன் அப்பனே நிச்சயம் தண்டனை
அனுபவித்தே ஆக வேண்டும் அப்பனே
.
எதை என்று அறிந்த பொழுதும்
அறியாத பொழுதும் கூட அப்பனே
தின்றுட்டு நின்றுட்டு் எவை என்று அறிய அறிய பிரம்மஹத்தி தோஷத்தில் முதல்
வகையான ( தோஷமாக ) வருவது தன்
சுயநலத்திறக்காக தன் சுவைக்காக அப்பனே
எவனொருவன் உட்கொள்கின்றானோ அதில்தான் முதல்
வகையான அடிக்கும் அடி பலமான அடியப்பா பின் குடும்பமே
கெட்டு விடும் என்பேன் சொல்லிவிட்டேன்
அப்பனே.
அப்பனே ஆனாலும் சிலபேர் கேட்பார்கள்
அப்பனே இதையும் கூட நேற்றைய
பொழுதில் சொல்லி விட்டேன் அப்பனே.
உண்பவர்கள் அப்பனே நலமாக இருக்கிறார்கள்
என்று. ஆனால் எத்தனை எத்தனை
நோய்கள் அப்பா.
அப்பனே நீங்கள் போய் அப்படியாப்பா
எதையும் புரியாமல் கூட அப்பனே
கடைசியில் நோய்கள், நோய்கள் என்று எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
தீபங்கள் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இறைவனை நாடி நாடி கொண்டிருக்கிறாரகள்
அப்பனே.
அதானால்தான் சொன்னேன். பின்பே வருவதை முன்பே
சொல்லிவிட்டேன். அப்பனே பயன்படுத்தினால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அப்படி இல்லை என்றால் யாரோ சொல்கிறான் என்று அதாவது
இதை என்று அறிய பின்பற்றவில்லை
என்றால் அப்பனே தண்டனைகள் உண்டு கடைசியில் அப்பனே சொல்லிவிட்டேன்.
அப்பனே அவை மட்டும் இல்லாமல்
ஈசனுடைய குழந்தைகளை
( பிற ஜீவரீசிகளை ) கொன்று விட்டு
அப்பனே ஈசனிடத்தில் சென்றால் அப்பனே
என்ன பிரயோஜனம்? அப்பனே.
அப்போது எண்ணிக் கொள்ளுங்கள் மனிதன் எவ்வளவு
கீழானவனாக ( கேவலமாக) இருக்கின்றான் என்று அப்பனே.
எப்படி அப்பா ஈசன் நல்லதே
செய்வான் அப்பனே.?
அதனால் அப்படியே சொல்லிவிட்டேன். எப்பொழுதும் என் பக்தர்கள்
இதை தெரிந்து கொள்ள வேண்டும்
அப்பனே. மாமிசத்தை உண்டால் கஷ்டங்கள்
வந்தே தீரும். அதாவது அகத்தியனை
நம்பினாலும் சொல்லிவிட்டேன்.
அகத்தியர்:- அறிந்தும் அறிந்தும் அதனால்
அப்பனே நல்லதை செப்பிக் கொண்டிருக்கின்றேன்
அப்பனே. ஏற்றுக் கொள்ளுங்கள் அப்பனே. ஏற்றுக்
கொள்ளாவிடில் அப்பனே தீயவைதான் நடக்கும்
சொல்லிவிட்டேன்.
அதனால்தான் அப்பனே வாக்குகள் வாக்குகள்
என்று கேட்கிறார்கள் அப்பனே. ஆனாலும்
யான் சொன்னாலும் அப்பனே அவன்தன்
பாவத்தில் இருக்கின்றான் என்பேன் அப்பனே.
முதலில் அப்பனே எப்படி மனிதனாக
வாழவேண்டும் என்று எண்ணி வாழவேண்டும்
அப்பனே.
அப்பொழுதுதான் நன்றாக இறைவன் எங்கு இருக்கின்றான், எங்கு வலம் வந்து கொண்டிருக்கிறான், அப்பனே எங்கு இருக்கிறான் அங்கு சென்றால்
எப்படி நலமாகும் என்பவை எல்லாம்
உங்களுக்கு என்ன தேவை?
அப்பனே எப்படி என்று சொல்லி
தர முடியுமே தவிர , அப்பனே
பின் அழுக்குகள் உள்ளே இருந்து
எவ் இறைவனை வணங்கினாலும் ஒன்றும் செய்யப்போவதில்லை
என்பேன் அப்பனே.
கஷ்டங்கள், கஷ்டங்கள் என்று கடைசியில்
பின் இறைவனே இல்லை. யான் அங்கு பரிகாரம் செய்தேன்,
இங்கு பரிகாரம் செய்தேன்,
எத்தனை திருத்தலங்கள் சென்றேன் என்பதை
யெல்லாம் அப்பனே ஒரு பிரயோஜனம்
இல்லையப்பா தெரிந்து கொள்ளுங்கள்.
அதனால் தான் நீங்கள் அனைவருமே
பூஜியத்திலேயே இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.
புலால் உண்ணாமை:
'அறம் செய்ய விரும்பு' என்றாள் தமிழ் மூதாட்டி.
இந்து தர்மம் உணர்த்தும் உன்னதமான அறங்கள் பலப்பல.
அறங்களில் தலையாயது எது? பார்ப்போம்!!!
திருவள்ளுவர் 'கொல்லாமை - புலால் மறுத்தல்' என்று இரு
அதிகாரங்களில் 'எக்காரணம் கொண்டும் ஒரு உயிரை கொல்லாது இருத்தல் - புலால் உணவை
உண்ணாது இருத்தல்' என்ற இவ்விரு செயல்களுமே அறங்களில் எல்லாம் தலைசிறந்த அறம்
என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
இராமலிங்க வள்ளலார்:-
19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருட்சுடரான வள்ளலார் 'புலால் உணவை உட்கொள்ளும் வரை
இறைவனின் அருளைப் பெற முடியாது' என்று அறுதியிட்டுக் கூறுகிறார். இறைவன் கருணை
வடிவானவன். கருணை எங்கு இல்லையோ - அங்கு இறைவன் வசிப்பதில்லை.
கங்கையில் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில்லாத ஞான சாத்திரம் உணர்ந்திட்டாலும்
மங்கு போல் கோடி தானம் வள்ளலாய் -வழங்கிட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன் போய் நரகு அடைவன் -அன்றே!!!!
புண்ணிய நதிகளில் நீராடினாலும், இறை வழிபாடுகள் செய்து வந்தாலும், ஞான நூல்களைக்
கற்றிருந்தாலும், தான தர்மங்கள் பல புரிந்தாலும், புலால் உணவு உட்கொள்ளும் செயல்
அந்த நற்செயல்களின் பலன்கள் அனைத்தையும் செயல் இழக்கச் செய்து, முடிவில்
நரகத்துக்கு ஒப்பான துன்பத்தையே தேடித் தரும் என்று எச்சரிக்கிறார் வள்ளலார்.
வேதங்கள் - உபனிடதங்கள் - சாத்திரங்கள் - பக்தி இலக்கியங்கள் - ஞானிகளின் வாக்குகள் - இவை உணர்த்தும் நீதிகள் என்றுமே இப்புவியில் பொய்ப்பதில்லை. அறம் செய விரும்புவோம்!!!!
கொல்லாமை - (திருக்குறள்):
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
தன் உயிரையே இழக்க வேண்டிய நிலை உருவாயினும், வேறு ஒரு உயிரை அதன் உடலில் இருந்து நீக்கும் செயலை செய்தல் கூடாது!!!
புலால் மறுத்தல் (திருக்குறள்):-
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவரை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்...
(கொன்றை வேந்தன் - அவ்வையார்):-
புலையும் கொலையும் களவும் தவிர் (வரி: 63)
கொன்றை வேந்தன் (அவ்வையார்):-
நோன்பு என்பது கொன்று தின்னாமை (வரி: 58).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக