அகத்தியரின் ஜீவநாடி அற்புதம் # 6 : பகுதி - 2
முந்தைய பகுதிக்கு :
ஜீவநாடி அற்புதங்கள் # : 6 (பகுதி -1)
London Doctor Vs Agasthiyar
லண்டன் மருத்துவரும் அகத்திய & திருமூல சித்தரும்!!
அனுமத்தாசன் அய்யா தொடர்ந்து..கூறுகிறார்.....!
இந்த பதில் என்னிடமிருந்து வந்ததால்,
அந்த மருத்துவருக்கு என் மீது சற்று வருத்தம்தான்.
பதில் பேசவில்லை. மௌனமானார்.
"என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அந்த லண்டன் நாட்டில் இந்த ஆபரேஷன் வெற்றி பெற்றால் நான் பணிபுரியும் அந்த மருத்துவமனைக்கு பெயரும், புகழும் அதிகமாகும்.
உலகத்திலிருக்கும் பலரும் அங்கு ஓடி வருவார்கள்.
அது தோல்வி அடைந்தால், எனக்கு பெருத்த அவமானம்.
அந்த மருத்துவமனையின் பெயரும் கெட்டு விடும்.
அதனால் தான், அகத்தியரிடமிருந்து மறுபடியும் நல்ல வரத்தை ஜீவ
நாடி
வாக்கு
வாங்கித் தாருங்கள்" என்று நிதானமாகக் கேட்டார்.
ஏதோ பிரச்சினை இருக்கிறது.
இல்லையென்றால் மறுபடியும் அதே கேள்வியை இவர் கேட்க மாட்டார் என்று அப்போதுதான் எனக்கு தெளிவாக புரிந்தது.
ஆதலால் மறுபடியும் அகத்தியர் ஜீவ நாடியைப் புரட்டி படிக்க ஆரம்பித்தேன்.
"அகத்தியன் அருள்வாக்குத் தந்தாலும் கீறல் வைத்தியம் செய்யும் பொது ஏதேனும் தடைகள் வராமலிருக்க யாமே பக்க பலமாக இருந்து அந்த மருத்துவச் சிகிர்ச்சையை வெற்றி பெற வைப்போம்”.
இன்று முதல் காலையிலும், மாலையிலும் தப்பாது 54 முறை
வைத்தீஸ்வர புகழ் பாடும் (ஸ்ரீ வைத்தியநாத அஷ்டகம்) மந்திரத்தை சொல்லி வா" என்று
அகத்தியர் அழுத்தம் திருத்தமாக உத்தரவு போல் அருள் வாக்கு சொன்னார்.
இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு தான்
அந்த மருத்துவர் முகத்தில் மகிழ்ச்சியே ஏற்பட்டது.
சந்தோஷமாக லண்டன் புறப்பட்டுப் சென்றார்.
லண்டனில் அறுவைச் சிகிர்ச்சை முறையை மூன்றாண்டுகள் கற்றதோடு பிற நாடுகளுக்கும் சென்று கீறல் ச்கிர்ச்சையை சிலகாலம் தங்கிக் கற்றவர் எதற்காக என்னிடம் வந்து அகத்திய ஜீவ நாடி வாக்கு கேட்க வேண்டும் என்று எனக்கு அப்போது புரியவில்லை.
மருத்துவர்கள் யாரும் நாடி-
ஜோதிடத்தில் முழு நம்பிக்கை வைப்பது கிடையாது. விஞ்சான
வளர்ச்சியை அன்றாடம் கற்றுக் கொண்டு அதுவே உண்மை என்று ஆராய்ந்து கொண்டிருப்பவர்கள். தங்கள்
மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்ற கருத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
அப்படிப்பட்ட அறிவியல் துறையை சேர்ந்த மருத்துவர் ஒருவர், லண்டன் நாட்டிலிருந்து இங்கு வந்து அகத்தியர் அருள் வாக்கைக் கேட்டு, மிகப் பெரிய அறுவை சிகிர்ச்சையை செய்யப் போகிறார் என்றால், அவருக்கு அகத்தியர் மீது அளவு கடந்த பக்தி இருக்கும் என்றே எண்ணத் தோன்றியது.
சொந்த நாட்டிற்கு (லண்டன்
) சென்றதும் அந்த மருத்துவரிடமிருந்து
ஒரு செய்தி எனக்கு வந்தது.
"சார்!
இன்னும் மூன்று நாளில் அந்த ஆபரேஷன் நடக்கப் போகிறது.
இன்று எனக்கு திடீரென்று கை, கால்கள் நடுங்க ஆரம்பித்திருக்கிறது.
விரல்களில் நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த
நடுக்கம் பயத்தால் இல்லை.
நரம்பு சமபந்தமான பிரச்சினையால் ஏற்பட்டிருக்கிறது.
மற்ற டாக்டர்களிடம் காட்டி மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.
நாளை காலைக்குள் எனக்கு குணமாக வேண்டும்.
அகத்தியரிடம் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்றார்.
அகத்தியர் சாதாரணமாக வாக்கு கொடுக்கமாட்டார்.
ஏற்கனவே நல்ல வாக்கு கொடுத்திருக்கும் போது ஏன் இப்படி பயப்படுகிறார்.
மனுஷனுக்கு தன்னம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை போலிருக்கு என்றுதான் என்னால் எண்ண முடிந்தது.
நான் தைரியம் சொல்லி, அகத்தியரை வேண்டி "தைரியமாக காரியத்தில் இறங்குங்கள் எப்படியும் நல்லபடியாக ஜெயித்து விடுவீர்கள்" என்று
வாயளவில் உற்சாகத்தை ஊட்டினேன். இருந்தும்,
என்னவோ நடக்கப் போகிறது என்று உணர்ந்தேன்.
மூன்றாம் நாள் காலை.
என் மனதிற்குள் ஒரு எண்ணம்.
அந்த இளம் மருத்துவரின் நரம்புத் தளர்ச்சி சரியாகி இந்நேரம் ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கும். அது
வெற்றி பெற்றதும் அந்த மருத்துவர் நிச்சயம் எனக்கு செய்தியைச் சொல்வார் என காத்திருந்தேன்.
மாலை வரை ஆகியும் அவரிடமிருந்து எந்த விதமான செய்தியும் வரவில்லை. பொதுவாக
இப்படி நான் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருந்து பழக்கமில்லை.
எது நடந்தாலும் அகத்தியர் பார்த்துக் கொள்வார் என்று விட்டு விடுவேன்.
ஆனால்....
ஶ்ரீ அகத்தியர் பதம் போற்றி!!
●★●★●★●
முழுதும் வாசித்த அனைவருக்கும் .. நன்றிகள்
★ கருவூரான் ★
www.t.me/jeevanaadi/ & https://siththarkaldesam.blogspot.com/
முந்தைய தொடர்ச்சி : null
+ தொடர்ச்சி : ஜீவநாடி வாக்கியம் பெற / ஜீவநாடி படிக்க அணுகுவது எப்படி ?
முந்தைய பகுதிக்கு : நழிந்த தொழிலதிபரை உயர்த்திய நந்தீசர் ஜீவநாடி